புலியின் வால் பகுதி மட்டுமே போரில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும் புலியின் ஏனைய பகுதிகள் உலகம் முழுவதும் பரவிக்கிடப்பதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்மிரல் தெரிவித்துள்ளார்.
த கார்டியன் பத்திரிகை இலங்கையை ஈழம் என குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“ இலங்கை மண்ணில் புலிகளை துடைத்தெறிந்தாலும் அவற்றின் தலைகள், கை,கால்கள், கனடா, ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருக்கின்றன.புலிகளின் ரோமங்கள் தமிழ்நாடு முதல் உலகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றன. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்து ஈழம் என்ற கனவை முற்றாக ஒழித்தழிக்க வேண்டும் எனவும் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.
புலம்பெயர் தமிழர்கள் மிகவும் வலுவான முறையில் ஐரோப்பாவில் செயற்படுவதன் காரணமாக அரசாங்கத்தின் முழுப் பலத்தையும் பயன்படுத்தி அதற்கு எதிராக செயற்பட வேண்டும். அரசாங்கம் உடனடியாக தலையீட்டதன் காரணமாக கார்டியன் பத்திரிகை தாம் வெளியிட்ட கருத்தை திரும்ப பெற்றுக்கொண்டது. இதனையும் ஒரு விதத்தில் வெற்றியாகவே கருத வேண்டும் எனவும் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளார்.