போர் நிறைவடைந்து 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் 17 பேருக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா மேற்கொண்ட கோரிக்கைக்கமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர் லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகரத்திற்கு முன்னால் கூடிய தமிழர்களின் கழுத்தை வெட்டுவதாக சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவுக்கு மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் மேஜர் ஜெனரால்களாக 5 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.