கொழும்பு புறக்கோட்டை பிரதேசத்தில் உள்ள கபீர் கட்டடத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளி தொடர்பில் அச்சம் கொள்ள தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கடற்படை ஊடகப் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
புறக்கோட்டை கபூர் கட்டடத்தில் தங்கியிருந்த கடற்படை வீரருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை.
குறித்த கட்டடம் கடற்படையால் கையகப்படுத்தப்பட்டது.
அங்கு சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய நடவடிக்கைகள் இடம்பெறுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளாதாக கொழும்பு ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200இற்கும் மேற்பட்டவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.