வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 522 கொரோனா நோயாளர்கள் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவர்களில் 466 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரியவந்துள்ளது.
கட்டாரில் இருந்து 270 பேர் இலங்கை வந்துள்ள நிலையில் 150 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து இலங்கை வந்த 466 பேரும் இதுவரையில் முதலாம் சுற்று பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளர். மேலும் 10 நாட்களில் அவர்கள் மீண்டும் பீ.சீ.ஆர் பரிசோதனை உட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கட்டார் நாட்டில் இருந்து இலங்கை வந்த 270 பேரும் பீ.சீ.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று சமூகத்திற்கு பரவாமல் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.