செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி

தொண்டமானின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா அறிகுறி

1 minutes read

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிச்சடங்களில் கலந்து கொண்ட சிலருக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மலையகத்தை பிரதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர், அவரது வீட்டில் இருந்தவரும் சாரதி ஒருவரும் நேற்றைய தினம் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களை 14 நாட்கள் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் சௌந்தர் ராகவன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் வைக்கப்பட்ட பத்தரமுல்லையிலள்ள அவரது வீட்டிலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைமையகத்திற்கும் சென்றுள்ளார்.

செய்தி சேகரிப்பதற்காக அந்த பிரதேசத்திற்கு சென்று அவர் திரும்பியுள்ளார். அவரின் இறுதிக் கிரியைகளின் பின்னர் குறித்த ஊடகவியலாளருக்கு கொரோனா அறிகுறிகள் சில காணப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நோய் அறிகுறிகள் தென்பட்டதனை தொடர்ந்து குறித்த பிரதேச ஊடகவியலாளர் டிக்கோயா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பீசீஆர் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொளள்ப்படும் எனவும் மீண்டும் ஒரு முறை பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அதுவரை அந்த ஊடகவிலாளர் மற்றும் ஏனைய இருவர் ஹட்டன் திம்புல பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#corona #thondaman #deathhome #Pcr #தொண்டமான் #கொரோனா

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More