நாடு முழுவதும் மீளவும் இன்றிரவு 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் நாளைய தினம் அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் அன்றைய தினம் அரச அலுவலகங்களுக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் 6ம் திகதி காலை 4 மணிக்கு தளத்தப்படும் ஊரடங்கு உத்தரவு வழமை போன்று நாடு முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் அமுலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அறிமுகப்படுத்திய சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
#Covid-19 #Corona Virus #Police #Curfew #ஊரடங்கு #கொரோனா #வைரஸ்