வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் உள்ளிட்ட அஜீரண கோளாறுகளுக்கு வழங்கப்படும் ஃபெமோடிடின் (famotidine) மருந்து, கொரோனா அறிகுறிகளுக்கு எதிராக நல்ல பலன்களை தருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் உள்ள கோல்டு ஸ்பிரிங்க் ஹார்பர் ஆய்வக கேன்சர் மைய விஞ்ஞானிகள் கொரோனா நோயாளிகள் 10 பேருக்கு இந்த மருந்தை அளித்த பரிசோதித்ததில், இது கண்டுபிடிக்கப்பட்டதாக Gut. Scientists மருத்துவ இதழ் தெரிவித்துள்ளது.
தினசரி மூன்று முறை 80 மில்லிகிராம் என்ற அளவுக்கு 11 நாட்கள் 10 நோயாளிகளுக்கும் ஃபெமோடிடின் மருந்து வழங்கப்பட்டது. ஆச்சரியமளிக்கும் விதமாக இருமல்.
மூச்சுத் திணறல்,மயக்கம், தலைவலி, மணம் சுவை பாதிப்பு ஆகிய முக்கிய கொரோனா அறிகுறிகள் அவர்களிடம் இருந்து மறைந்து விட்டதாக ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.