இந்த ஆண்டின் முதல் சூரியக்கிரகணம் இன்று நிகழ்கிறது.
இந்நிலையில் இந்த சூரியக்கிரகணம் இலங்கைக்கு பகுதியளவில் தென்படும் என்று இலங்கை கோள்மண்டலம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த நிறுவகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது, “அதில் ஒரு பகுதி சூரிய கிரகணம் சுமார் 10.24 மணி முதல் இலங்கையில் தென்படும்.
யாழ்ப்பாண பிராந்தியத்தில் கிரகணத்தின் உச்சக்கட்டம் சுமார் 11.54 ஆக இருக்கும், அதே நேரத்தில் 11.51 அளவில் கொழும்பில் கிரகணத்தின் பார்க்கமுடியும்..
இந்தநிலையில் சூரியக் கண்ணாடிகள் அல்லது எக்ஸ்ரே தாள்களால் ஆன இருண்ட கண்ணாடிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சூரிய கிரகணத்தைக் பார்க்க வேண்டாம் என்று கோரப்பட்டுள்ளது,
ஆனால் சூரிய கிரகணத்தைக் கவனிக்க குறிப்பாக பயன்படுத்தப்படும் 14 வது வேல்டீங் (இரும்பு பொருத்து) கண்ணாடிகள் மற்றும் ஏனைய பரிந்துரைக்கப்பட்ட கண்ணாடிகளை மட்டுமே பயன்படுத்துமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
இந்த பகுதி சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்று இலங்கை கோள் மண்டலம் அறிவுறுத்தியுள்ளது.