படையினர் 3000 பேரை கொலை செய்த கருணா அம்மானை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் பேசிய அந்த அமைப்பின் தலைவர் மகல்கந்த சுதத்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அம்பாறை மாவட்ட வேட்பாளருமான விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா அம்மான் நாவிதன்வெளி பிரதேசத்தில் மக்கள் கூட்டமொன்றில் 3000 படையினரை கொன்றதாக கூறியிருந்தார்.
அவரின் இந்த கருத்து பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையிலேயே, கருணாவை உடன் கைது செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இதேவேளை, மனித கொலையுடன் தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கருணாவை கைது செய்ய முடியும்.
இதற்கான நேரடியாக நடவடிக்கையை முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின் தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பு ஒன்றின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக் கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே இவரும் மனிதப் படுகொலையைச் செய்துள்ளார்.
எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை துரிதமாக முன்னெடுக்க வேண்டும்” என அரவ் மேலும் கூறியுள்ளார்.