முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) இம்முறை பொதுத் தேர்தலில் தங்கள் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர் அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஒரே இரவில் 2000இற்கும் அதிகமான இராணுவத்தினரை கொலை செய்தாக கருணா அண்மையில் வெளியிட்ட கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கருணா என பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
எனினும் அந்த கருத்துக்களுக்கு பதிலளித்த கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றுமொரு கட்சியில் அம்பாறை தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருணா தங்கள் கட்சியின் வேட்பாளர் அல்ல என அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் கொள்கைகளுக்கமைய செயற்படுபவர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேச துரோக நிகழ்ச்சி நிரலை பின்பற்றுபவர்களுடன் தங்கள் கட்சி இணைந்து செயற்படாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.