அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார்.
இது தொடர்பான கடிதத்தை அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார். தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் முடிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலும் இந்த வெற்றிடம் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.