நாட்டின் பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருக்கின்றதென மாத்தளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வெட்டுக்கிளிகளினால் ஏற்படும் அபாயத்தை அரசாங்கம் தடுக்காவிடின் விவசாயிகள் பாரிய பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த மக்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, அநுராதபுரம், பொலன்னறுவை, கண்டி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் காணப்படுகின்றது.
ஆனால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள இந்த பிரச்சினைகளுக்கு தீர்வொன்றை வழங்குவதற்கு அரசாங்கம் எந்ததொரு செயற்பாட்டையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.
எனவே விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்காமல், இவ்விடயத்தில் காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.