முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயதங்களை தேடி தோண்டும் நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது இதன்போது நிலத்தில் புதைக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆவணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
மாத்தளன் பகுதியில் தனியார் காணி ஒன்றில் வீடு ஒன்றிற்குள் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குறித்த பகுதியில் தோண்டும் நடவடிக்கை ஒன்று நேற்று (02.07.2020) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது விடுதலைப்புலிகளின் இலச்சினைகள் பதிக்கப்பட்ட துண்டுகள் மற்றும் நிலத்தில் புதைக்கப்பட்ட துணிகள்,தமிழீழ வரைபட புத்தகம் விடுதலைப்புலிகளின் வங்கியான வைப்பகத்தின் சிறுவர்களுக்கான தளிர் சேமிப்பு கணக்கு புத்தகம் ஒளிப்படங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.