2
கொரோனா தொற்றில் இருந்து இன்று 22 பேர் குணமாகி வீடுகளுக்கு திரும்பினர் இவர்கள், வெலிகந்த, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில் மற்றும் மினுவாங்கொட வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.
இதனையடுத்து இலங்கையின் கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 1885ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2070ஆக உயர்ந்துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் 174 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.