கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சற்று முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கந்தகாடு முகாமில் 252 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கந்தகாடு முகாமில் அடையாளம் காணப்பட்ட அனைத்து நோயாளர்களும் போதைப்பொருளுக்கு அடிமையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கொரோனா ரைவஸ் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.