நாட்டை திறந்த பின்னர் மக்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு துறையினர் எல்லையை மீறி செயற்பட்டமையே மீண்டும் கொரோனா வைரஸ் பரவ காரணம் என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சுகாதார பாதுகாப்பு முறையை கருத்திற்கொள்ளாமல் செயற்பட்டதனை காண முடிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், தினசரி வாழ்க்கையை நடத்தி செல்லுதல் ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டே நாடு திறக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் மக்கள், அரசியல்வாதிகள் மற்றும் நிறுவனங்கள் அதனை இலகுவாக எடுத்துக் கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எப்படியிருப்பினும் இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் எனவும், அதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொழில்நுட்ப குழு கூடி கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு பலவேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும், அதனை செயற்படுத்துவதற்கு மக்கள், அரசியல்வாதிகளின் உதவி அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.