கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா கொத்து இதுவரையில் 532 வரையில் அதிகரித்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்றைய தினம் மாத்திரம் கொரோனா தொற்றுக்குள்ளான 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் மாத்திரம் ராஜாங்கன யாய பிரதேசத்தில் 300 இற்கும் அதிகமானோர் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேவேளை, ராஜாங்கன யாய பிரதேசத்தில் தொடர்ந்து பீசீஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றது.
ராஜாங்கன-யாய கொரோனா கொத்துடன் தொடர்புடையவர்களை தேடி நாடு முழுவதும் பல பகுதிகளில் பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றியவர் தொடர்பில் சரியான தகவல்கள் சுகாதார பிரிவினால் அறிவிக்கப்படும். போலியான தகவல்களை நம்ப வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.