0

பண்ணாகத்தின் பெரும் பண்டிதருக்கு (ஆறுமுகனாருக்கு) இன்று அகவை நூற்றி மூன்று…
“செயற்கரிய செய்வார் பெரியர்”என்ற வாக்கிற்கமைய பண்டிதர் அ.ஆறுமுகம் அவர்கள் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல.
- விசவத்தனை முருகப்பெருமான் மீது பல திவ்ய பிரபந்தங்களை பாடியவர். எம் பெருமானின் திருத்தலத்தை பாடல் பெற்ற தலமாக்கியவர்.
- விசவத்தனை முருகன் பிள்ளைத்தமிழ்
- விசவத்தனை முருகன் திருப்பள்ளியெழுச்சி
- விசவத்தனை முருகன் இரட்டைமணிமாலை
- விசவத்தனை முருகன் திருஊஞ்சல்
- விசவத்தனை முருகன் மும்மணிக்கோவை
போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ஏறத்தாழ 23 நூல்களை இயற்றிய நூலாசிரியர். - புலவர்மணி, சிவநெறிச்செல்வர், கலாபூஷணம், அருட்புலவர், பண்டிதர் போன்ற பல பட்டங்களினை தன்னகத்தே கொண்டு மிளிர்ந்தவர்.
இறவாப்புகழுடையவர்
ஆறுமுகம்ஆனபொருள்நீயருள
வேண்டும்
16.12.1917….. 16.12.2020