செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

ஒலிம்பிக் போட்டிகளில் வரலாறு படைக்கவுள்ள திருநங்கை

1 minutes read

டோக்கியோ விளையாட்டுக்கு தகுதி பெறுவதன் மூலமாக ஒலிம்பிக்கில் பங்கேற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பளு தூக்குதல் வீரர் லாரல் ஹப்பார்ட் பெறவுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்குச் செல்லும் தேசிய மகளிர் பளு தூக்குதல் அணிக்கு 43 வயதான நியூஸிலாந்து வீரர் ஹப்பார்ட் இன்னும் பெயரிடப்படவில்லை.

எனினும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் அளித்த திருத்தப்பட்ட விதிகளின் காரணமாக தானாகவே லாரல் ஹப்பார்ட் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்க தகுதி பெறுவார் என்று நியூசிலாந்து ஒலிம்பிக் கமிட்டி உறுதிபடுத்தியுள்ளது.

கொவிட் -19 தொற்றுநோயால் பல போட்டிகள் தோல்வியடைந்த பின்னர் நடைமுறைக்கு வந்த புதிய தகுதி விதிகளின் கீழ், ஜூலை 5 ஆம் திகதி வரை டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கெடுக்கும் அணி வீரர்கள் பெயரிடப்பட வேண்டியதில்லை.

ஹப்பார்ட் 2017 உலக பளு தூக்குதல்  சாம்பியன்ஷிப்பில் வெள்ளி பதக்கம் பெற்றார். தற்சமயம் உலக தரவரிசை பட்டியலில் 17 ஆவது இடத்தில் உள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More