அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சோதனை நடைபெற்று வருகிறது.
கோவை குனியமுத்தூரில் உள்ள அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக எஸ்.பி.வேலுமணி இருந்தபோது முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இந்த சோதனை நடைபெற்று வருகிறது. எஸ்.பி.வேலுமணி இல்லம் முன்பு அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.