செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்

கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்

1 minutes read

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்த பிரவீன் குமார் சோப்தி மாரடைப்பால் காலமானார்.

கமலுடன் நடித்த பீம் பாய் நடிகர் காலமானார்மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பிரவீன் குமார் சோப்தி1988ஆம் ஆண்டு ‘மஹாபாரத்’ திரைப்படத்தில் பீமாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரவீன் குமார் சோப்தி. இவர் நடிகர் மட்டுமின்றி, விளையாட்டு, அரசியல்வாதி என பன்முக திறமை கொண்டவர். இவர் 50-க்கும் மேற்பட்ட இந்தி படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் பீம்பாய் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த பீம்பாய் கதாப்பாத்திரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அவிநாசி என்ற கதாப்பத்திரத்தில் நடித்திருந்த நாகேஷை பீம் பாய் ஒரே கையில் தூக்கி செல்லும் காட்சி இன்று வரை பிரபலமாக உள்ளது.

விளையாட்டு வீரரான இவர், ஆசிய அளவில் நடத்தப்பட்ட பல போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு பல விருதுகளையும் வென்றுள்ளார்.

பிரவீன் குமார் சோப்தி

பிரவீன் குமார் நீண்ட நாட்களாக மார்பு தொற்று பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இரவு மாரடைப்பால் பிரவீன் குமார் காலமானார்.

74 வயதாகும் பிரவீன் குமாருக்கு மனைவி, மகள், இரண்டு இளைய சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி உள்ளனர்.
இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More