எண்ணெய் விலையை குறைக்க அமெரிக்கா புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க திட்டமிட்ட நிலையில் எண்ணெய் விலை வேகமான சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்கா தனது மூலோபாய எண்ணெய் கையிருப்பில் இருந்து எதிர்வரும் மாதங்களில் 180 மில்லியன் பீப்பாய் வரை எண்ணெயை விடுவிக்க ஆலோசித்திருப்பதாக அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது.
இது உறுதி செய்யப்பட்டால், 1974 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த கையிருப்பில் இருந்து மிகப்பெரிய விடுவிப்பாக இது அமையும்.
உக்ரைனில் நீடிக்கும் போர் காரணமாக விநியோகத்தில் தடங்கல் ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த சில வாரங்களில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது.
எனினும் அமெரிக்காவின் புதிய அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசியாவில் நேற்றுக் காலை வர்த்தகத்தில் அமெரிக்க எண்ணெய் குறியீடான மேற்கு டெக்சாஸ் இடைநிலை 5.6 வீதமும், பிரென்ட் மசகு எண்ணெய் 4.8 வீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.