அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அயர்லாந்து மோதவுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.
இச்சுற்றுலாவுக்கான முந்தைய அட்டவணைப்படி ஒரு டெஸ்ட் போட்டியிலும், 2 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதவிருந்தன. ஆனால் தற்போது ஒருநாள் போட்டிகளுக்கு பதிலாக மற்றொரு டெஸ்ட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.
இவ்விரு போட்டிகளும் காலியில் நடைபெறவுள்ளன. முதல் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும் 2 ஆவது போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளன.
2017 ஆம் ஆண்டு அயர்லாந்து டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை பெற்றது. இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் அவ்வணி விளையாடி 3 போட்டிகளிலும் தோல்வியுற்றது.
முதல் தடவையாக 2018 மே மாதம் பாகிஸ்தானுடன் டப்ளின் நகரில் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி மோதியது. 2019 மே மாதம் இந்தியாவின் டேராடூன் நகரில் ஆப்கானிஸ்தானுடன் அயர்லாந்து மோதியது. இறுதியாக இங்கிலாந்துடன் லோட்ஸ் மைதானத்தில் 2019 ஜூலையில் மோதியது.
சுமார் 4 வருடங்களின் பின்னர் தனது 4 ஆவது டெஸ்ட் போட்டியில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி முதல் பங்களாதேஷுடன் அயர்லாந்து மோதவுள்ளது.
அதன்பின் தனது 5 ஆவது மற்றும் 5 ஆவது போட்டிகளில் இலங்கையுடன் மோதவுள்ளது,
இலங்கை சுற்றுலாவுக்கான அயர்லாந்து குழாம்:-
அண்ட்ரூ பெல்பைர்னி (அணித்தலைவர்), கேர்ட்டிஸ் கேம்பர், மறே கொமின்ஸ், ஜோர்ஜ் டொக்ரேல், பியோன் ஹேன்ட், கிரஹம் ஹியூம், மெத்தியூ ஹம்ஸ்ப்றீஸ், டொம் மேய்ஸ், அண்ட்ரூ மெக்பிறைன், ஜேம்ஸ் மெக்கலம், பிஜே மூர், ஹரி டெக்டர், லோர்கன், டக்கர், பென் வைட்