உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலத்தை மேலும் நீடிப்பதற்கு விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் ஓர் ஏற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தலுக்குப் பணம் வழங்கக்கூடிய காலத்தை நிதி அமைச்சின் செயலாளர் அறிவித்தால் அதுவரை உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலத்தை நீடிக்க அமைச்சருக்கு சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலத்தை ஆணையாளர்களின் கீழ் கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உடன்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகார காலத்தை நீடிக்குமாறு கடந்த வாரம் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்த்தனவை அலரி மாளிகையில் சந்தித்து அறிவித்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் மேலும் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், தற்போதுள்ள சட்டத்தில் உள்ளூராட்சி சபைகளின் அதிகார காலத்தை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.