செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம்

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற பின் மற்றொருவரை மனைவி திருமணம்

1 minutes read

லொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம் செய்ததாக கூறும் தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர், மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்.

நரீன் எனும் இந்நபரும் மேற்படி பெண்ணும் 20 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தனர். இவர்களுக்கு 3 பிள்ளைகளும் உள்ளனர்.

2 மில்லியன் பாத் கடன் இருந்தால், கடனை அடைப்பதற்காக இவர்கள்  2014 ஆம் ஆண்டு தென் கொரியாவுக்குச் சென்றனர். பின்னர் பிள்ளைகளைப் பராமரிப்பதற்காக அப்பெண் தாய்லாந்துக்கு திரும்பி வந்தார். நரீன் தொடர்ந்தும் தென் கொரியாவில் பணியாற்றி மாதாந்தம் 27,000 முதல் 30,000 பாத் பணத்தை அனுப்பி வைத்தாராம்.

பின்னர், தனது மனைவி லொத்தரில் 12 மில்லியன் பாத் பணத்தை வென்றதையும் அதை தன்னிடமிருந்து மறைத்ததையும் நரீன் கண்டுபிடித்தார்.

கடந்த 3 ஆம் திகதி அவர் தாய்லாந்துக்கு திரும்புவதற்கு அவர் தீர்மானித்தார். எனினும் தொலைபேசி அழைப்;புகளுக்கு அவரின் மனைவி பதிலளிக்கவில்லை.

தனது மனைவி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பெப்ரவரி 25 ஆம்  திகதி திருமணம் செய்துள்ளதை தாய்லாந்தை வந்தடைந்த பின்னர் நரீன் கண்டுபிடித்தார்.

இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. 20 வருடங்களாக என்னுடன் வாழ்ந்த மனைவி இப்படி செய்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. ஒவ்வொரு மாதமும் அவருக்குப் பணம் அனுப்பியதால் எனது வங்கிக்கணக்கில் 60,000 பாத் மாத்திரமே எஞ்சியுள்ளது. எனக்கு நீதி வேண்டும்’ என நரீன் கூறியுள்ளார்.

எனினும்,  லொத்தரில் பரிசு வெல்வதற்கு பல வருடங்களுக்கு முன்னரே நரீனை தான் பிரிந்துவிட்டதாகவும், தனது காதலனை தான் திருமணம் செய்து கொண்டுள்ளதாகவும் அப்பெண் கூறியுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More