பாகிஸ்தானில் பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகள் மோசமானதாக உள்ளமை, நாட்டின் ஆட்சியை இராணுவம் கைப்பற்றுவதற்கு வழிவகுக்கக்கூடும் என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷஹீத் காகான் அப்பாசி எச்சரித்துள்ளார்.
2017 ஆகஸ்ட் முதல் 2018 மே வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவர் பாகிஸ்தான் ஷஹீத் காகான் அப்பாசி.
கடந்த காலங்களில் தற்போதைய நிலையைவிட குறைந்தளவு கடினமான சூழ்நிலைகளிலும் இராணுவம் தலையிட்டது எனவும், பாகிஸ்தானின் டோண் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இது போன்ற சூழ்நிலைகளில் பாகிஸ்தான் மிக நீண்டகாலம் இராணுவ சட்டத்தின் கீழ் இருந்தது. உண்மையில் இதைவிட மோசமான பொருளாதார அரசியல் சூழலை ஒரு போதும் எதிர்கொள்ளவில்லை என நான் கூறுவேன். குறைந்தளவு கடினமான சூழ்நிலைகளிலும் இராணுவம் ஆட்சியை பொறுப்பேற்றிருந்தது’ என்றார்.’
சமூகம் மற்றும் ஸ்தாபனங்களின் விரிசல்கள் மிக ஆழமாகும்போது, இராணுவம் தலையிடக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ சட்டத்தை அமுல்படுத்துவது குறித்து பாகிஸ்தான் இராணுவம் தற்போது சிந்திப்பதாக தான் கருவில்லை எனவும் ஆனால், வேறு தெரிவுகள் இல்லாதபோது, அத்தகைய நிலை ஏற்படக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.