ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களான தலதா அத்துகோரல, ரோஹினி குமாரி விஜேரத்ன ஆகிய இருவருக்கும் கட்சிக்குள் கடும் வெட்டு வீழ்கின்றது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய மக்கள் கட்சியால் நடத்திச் செல்லப்படுகின்ற சமூக ஊடகத் தளத்தில் அவர்கள் இருவருக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டாம் என்று கட்சியின் உயர்மட்டத்தால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.
அதன் அடிப்படையில் அவர்கள் இருவரும் நாடாளுமன்றத்திலும் வேறு இடங்களிலும் பேசும் பேச்சுக்கள் அதில் வருவதில்லை.
இது தொடர்பில் தலதா அத்துகோரலவிடம் வினவிய போது, “பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு” என்று மாத்திரம் அவர் பதிலளித்தார். அதைவிட வேறு கருத்து எதனையும் அவர் தெரிவிக்கவில்லை.