ஆசிய இளையோர் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வருகின்றது. ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கையின் துஷேன் சில்வா வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
போட்டியின் முதல் நாளான கடந்த வியாழனன்று (27) நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியின் துஷேன் 4.70 மீற்றர் உயரம் தாவி மூன்றாம் இடம் பெற்றார்.
இதன்மூலம் 72 ஆண்டுகளுக்குப் பின் ஆசிய விளையாட்டு விழாவொன்றில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக்கொண்டார்.
இதற்குமுன் 1951இல் நடைபெற்ற முதலாவது ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை சார்பில் கோலூன்றிப் பாய்தலில் முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற வீரராக எம்.ஏ அக்பர் இடம்பிடித்திருந்தார்.