செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை சீனாவின் ஜுராங் ரோவர் விண்கலம் கண்டறிந்துள்ளது.
செவ்வாயில் உள்ள மணல் திட்டுகளை ஆய்வு செய்த போது, அங்கு தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இதன் மூலம் அங்கு உயிர்கள் வாழ சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் ஜுராங் ரோவர் விண்கலம் நேரடியாக பனியாகவோ, உறைந்த நிலையிலோ நீரைக் கண்டறியவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உப்பு நிறைந்த குன்றுகளின் மேற்பரப்பு அடுக்கு நீரேற்றப்பட்ட சல்பேட்டுகள், சிலிக்கா, இரும்பு ஆக்சைடு தாதுக்கள் மற்றும் குளோரைடுகளால் நிறைந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.