இங்கிலாந்து மன்னரின் முடிசூட்டு விழா நடைபெறும் நிலையில், மத்திய லண்டனில் மன்னராட்சிக்கு எதிரான போராட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னராட்சிக்கு எதிரான குழுவின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பல நபர்களை தடுத்து வைத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்க சதி செய்தல், குற்றச் சேதத்தை ஏற்படுத்தும் வகையில் பொருட்களை வைத்திருந்தமை ஆகிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான சுவரொட்டிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.