கொங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிற நிலையில், பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அத்துடன், பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் ஏற்பட வெள்ளம்,மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 400-ஐ கடந்துள்ளது.
இதனையடுத்து, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், இராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.