முடிசூட்டு தினத்தன்று இலண்டனில் 52 பேர் கைது செய்யப்பட்டதையடுத்து, எம்.பி.க்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் பெருநகர பொலிஸாரை விமர்சித்துள்ளனர்.
மன்னராட்சியை அகற்றிவிட்டு ஒரு அரச தலைவரைத் தேர்ந்தெடுக்க விரும்பும் குடியரசுக் குழுவின் தலைவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.
16 மணிநேர காவலுக்குப் பிறகு சனிக்கிழமை மாலை விடுவிக்கப்பட்ட கிரஹாம் ஸ்மித், “இங்கிலாந்தில் அமைதியான போராட்டத்திற்கு இனி உரிமை இல்லை” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், முடிசூட்டு விழா “தலைமுறையில் ஒருமுறை நடக்கும் நிகழ்வாகும், இது எங்கள் மதிப்பீட்டில் முக்கியமானது என பொலிஸார் கூறியுள்ளனர்.
“டவுன் வித் தி கிரவுன்”, “பொலிஸாருடன் பேச வேண்டாம்” உள்ளிட்ட கோஷங்களுடன் சனிக்கிழமையன்று நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் மத்திய லண்டனில்கூடினர்.
ஏனைய போராட்டங்கள் கார்டிஃப், கிளாஸ்கோ மற்றும் எடின்பர்க்கில் ஏற்பாடு செய்யப்பட்டன.
போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலண்டனுக்கு வெளியே யாரும் கைது செய்யப்படவில்லை.