பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் முடிசூட்டு விழாவில் பங்கேற்க இலண்டன் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை நாடு திரும்பினார்.
டுபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் ஈ.கே. 650 என்ற விமானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை, மன்னர் சார்ள்ஸ் முடிசூடியதுடன், இந்த அரச நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி விக்கிரமசிங்க கடந்த வியாழக்கிழமை இலண்டன் பயணமானார்.
ஜனாதிபதி இலண்டனில் இருந்து நாடு திரும்பியவுடன் அரசியல் களத்தில் அதிரடிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.