மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்புத் தெருவில் 18 வயது இளைஞன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
இதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மேலும், இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
இந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்திய நபரைக் சுட்டுகொன்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார் என்பது இன்னும் தெரியவில்லை.
அவர் யார் என்றும், ஏற்கெனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டவரா என்பது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 215க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.