இலண்டன் வூட்ஃபோர்ட் கிரீனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இலண்டன் தீயணைப்புப் படை (LFB) திங்கட்கிழமை பிற்பகல் 2.19 மணியளவில் பெரிய தீவிபத்து பற்றி கிடைத்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்தது.
இந்த தீ விபத்தில், இரண்டு மாடி கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் ஒருவர் கட்டிடத்தை விட்டு வெளியேறினார். எனினும், மற்றொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிற்பகல் 2.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Woodford, Walthamstow மற்றும் Hainault தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை தற்போது LFB மற்றும் பெருநகர பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.