இலண்டன் Marsh Wall பகுதியில் உள்ள கட்டிடத்தின் 39வது மாடியில் இருந்து தவறி விழுந்து 26 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திங்கட்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து தாம் அங்கு அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே விழுந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த மரணம் சந்தேகத்திற்குரியதாக கருதப்படவில்லை, இருப்பினும் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்” என்றார்.