மட்டக்களப்பு, கல்லடி தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் தோணியில் மீன்பிடிக்கச் சென்றவர்களில் ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
கல்முனை, பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன் தனேஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வெளிநாட்டில் இருந்து வந்து கல்லடிப் பிரதேசத்தில் திருமணம் முடித்து மூன்று மாதங்களான நிலையில் அடுத்த வாரம் மீண்டும் வெளிநாட்டுக்குச் செல்லத் தயாராக இருந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.