கிழக்கு லண்டனில் இரண்டு நாய்கள் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து, பெருநகர காவல்துறை மீது குற்றச்சாட்டும் மனுவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
மே 7 மாலை 5 மணிக்குப் பிறகு நாய் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் காலில் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படாத ஒரு பெண்ணைக் கண்டனர்.
இந்த சம்பவத்தின் போது நாய்களின் உரிமையாளர் அதிகாரிகளால் தரையில் அமர செய்யப்பட்டு நாய்கள் சுட்டுக் கொல்லப்பட்டன.
இதனையடுத்து, விலங்கு உரிமை ஆர்வலர்கள், நாய்களை சுட்டுக் கொன்றது “காட்டுமிராண்டித்தனமானது” என்று தெரிவித்தனர்.
மே 11 வெஸ்ட்மின்ஸ்டர் எம்பேங்க்மெண்டில் உள்ள நியூ ஸ்காட்லாந்து யார்டுக்கு வெளியே விலங்கு நல ஆர்வலர்கள் கூடி எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மே 7 அன்று நடந்த சம்பவத்துடன் தொடர்புடைய புகார்கள் “சுயாதீனமாக விசாரிக்கப்பட வேண்டும்” என்பது பொருத்தமானது என்று பொலிஸ் நடத்தைக்கான சுயாதீன அலுவலகம் (IOPC) தெரிவித்துள்ளது.