செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை: உக்ரைன் அதிரடி

ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை: உக்ரைன் அதிரடி

0 minutes read

உக்ரைன் போரில் குறைந்த விலையில் ரஷியாவுக்கு ஆயுதம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஈரான் மீது ஏற்கனவே பல்வேறு பொருளாதார தடைகளை உக்ரைன் விதித்துள்ளது.

இந்தநிலையில் ஈரானுக்கு எதிராக உக்ரைன் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதிய மசோதாவை தாக்கல் செய்து பேசினார்.
அப்போது இந்த மசோதா அடுத்த 50 ஆண்டுகளுக்கு ஈரான் மீது விரிவான துறைசார் பொருளாதார தடைகளை விதிக்க வழிவகை செய்கிறது என அவர் கூறினார்.

மேலும் உக்ரைன் வழியாக அதன் வளங்களை கடத்துதல், தொழில்நுட்பம் மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை மாற்றுவதற்கு தடை விதிக்க இந்த மசோதா வழிவகை செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் ரஷியா மற்றும் ஈரானில் உள்ள 141 சட்ட நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு உக்ரைன் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More