சீனா அரசாங்கம் சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை அதிரடியாக முடக்கியது.
சமூக வலைதளங்கள் மூலம் பணமோசடி உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக கொடுக்கப்பட்ட புகார்களை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் சீன அரசாங்கம் மேற்கொண்ட சிறப்பு சோதனையில் சினா, வெய்போ, வீசாட் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட போலி கணக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களில் தவறான பதிவுகளை பதிவிட்ட சுமார் 66 ஆயிரம் போலி சமூக வலைதள கணக்குகளை மூடி உள்ளதாக அந்த நாட்டின் இணையதள விவகார ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் டிக்-டாக் செயலியின் சீன பதிப்பான டூயினில் சுமார் 9 லட்சம் கணக்குகள் தவறான தகவல்களை பதிவிட்டதற்காக முடக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.