1
கிளிநொச்சியில் பாடசாலை மாணவி ஒருவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஜி.சீ.ஈ. உயர்தரத்தில் கல்வி கற்ற பாவலன் பானுசா (வயது 18) என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி, புன்னை நீராவி பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே குறித்த மாணவியின் சடலத்தை மீட்டுள்ளதாகத் தர்மபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காகக் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.