இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் கிரேக்க கடலில் கவிழ்ந்து மூழ்கியது.
மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மிகக் பயங்கரமான இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 79 சடலங்கள் கிரேக்க அதிகாரிகளால் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
நேற்று அதிகாலையில் கப்பல் கவிழ்ந்ததை அடுத்து, கிரீசின் கடலோரக் காவல்படை விமானங்களுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.
மீட்பு பணிகளில் இதுவரை 104 பேர் காப்பாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
400 பேர் வரை படகில் இருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
கப்பலின் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்ததாக உயிர் பிழைத்தவர்கள் கூறியுள்ளனர்.