சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை தீவிரமடைந்து உள்ளது.
இந்த நிலையில் சூடானில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உட்பட குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டனர்.
சூடான் இராணுவத்திற்கும், துணை ராணுவ ஆதரவுப் படைகளுக்கும் இடையேயான சண்டையில் இந்த வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.
காயமடைந்த பொதுமக்கள் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சூடானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.
இறந்தவர்களில் ஐந்து குழந்தைகள் உள்ளதாகவும் இந்த தாக்குதல் சம்பவத்தில் 25 வீடுகள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.