வீதி விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமுர்த்தி வங்கியில் மானியத்தைப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற 68 வயதான வயோதிபப் பெண்ணே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
ஹந்தபாந்கொட சமுர்த்தி வங்கிக்கு முன்பாக பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியமையால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த நிலையில் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிசிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
19 வயதான இளைஞர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளே விபத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த இளைஞரும் ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞருக்குச் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும், அவர் தனது தந்தைக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது எனவும் இங்கிரிய பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.