ஈரானில் 26 வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 6 பேர் நசுங்கி உயிரிழந்தனர்.
தென்மேற்கு ஈரானின் கோகிலுயே மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு போயர் அகமது மாகாணம் நோக்கி பயணித்த லொறியொன்றின் பிரேக் திடீரென செயலிழந்தது.
இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லொறிஎதிரே வந்த வாகனங்கள் மீது மோதியது. இதனையடுத்து ஒன்றன்பின் ஒன்றாக 26 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.
மேலும் சாலையில் நடந்து சென்ற பாதசாரிகள் மீதும் இந்த வாகனங்கள் மோதி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 25-க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
விபத்து நடந்த வீதியில் இருந்து வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதன்பிறகே அங்கு இயல்பு நிலை திரும்பியது.