கிழக்கு லண்டனில் நெரிசலான இடத்தில் ஒரு நபர் மார்பில் சுடப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சனிக்கிழமை இரவு 10.45 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வால்தம்ஸ்டோவில் உள்ள பிளாக்ஹார்ஸ் லேனில் உள்ள பகுதிக்கு அதிகாரிகள் விரைந்தனர்.
22 வயதுடைய நபர் ஒருவர் வயிற்றில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையைத் தொடர்வதால், தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.