யாழ்ப்பாணத்தில் இருந்து 43 பயணிகளுடன் கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் அதிசொகுசு பஸ் தீக்கிரையாகியுள்ளது.
புத்தளம், மதுரங்குளிப் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்த விபத்து நேர்ந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, பஸ்ஸில் சென்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மற்றுமொரு பஸ்ஸில் கொழும்பு நோக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறித்த பஸ்ஸின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்கான காரணம் என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.