உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் மீதான விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது.
அதன்பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பில், சட்டமூலத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன. அந்தவகையில் 60 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேறியது.