அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாளை (10) பிரிட்டன் வருகின்றார்.
லித்துவேனியாவில் நடைபெறும் நேட்டோ உச்சநிலைச் சந்திப்புக்குச் செல்லும் வழியில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், மன்னர் சார்ல்ஸ் ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.
அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அந்தச் சந்திப்பு அமையும் என்று வெள்ளை மாளிகை தெரிவிக்கின்றது.
பைடனும் சுனக்கும் உக்ரேன் விவகாரம், நேட்டோ உச்சநிலைச் சந்திப்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், பைடனும் மன்னர் சார்ல்ஸும் பருவநிலை விவகாரங்களை ஆராய்வர் என்று கூறப்படுகின்றது.