உக்ரேன் மீது ரஷ்யா போரை தொடங்கி 500 நாள்கள் நிறைவடைந்து விட்டன.
இந்த நிலையில், பதிலடித் தாக்குதலில் உக்ரேனியப் படையினர் மெல்ல மெல்ல முன்னேறிச் செல்கின்றனர்.
இருப்பினும் போர் முடிவுக்கு வருவதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை. அத்துடன், உக்ரேனின் முக்கியமான நகரங்களில் அச்சுறுத்தல் நீடிக்கிறது.
கடந்த 500 நாள்களில் 4,000க்கும் அதிகமானோரைக் காப்பாற்றியிருப்பதாக உக்ரேன் அவசரச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், 15,000க்கும் அதிகமான இடங்களில் நெருப்பு அணைக்கப்பட்டதாக கூறியுள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் குண்டு வீச்சுக்குப் பிறகு நிலைமையைச் சீராக்க 104,000க்கும் மேற்பட்ட முறை பயணம் செய்ய நேர்ந்தது என்றும் அவசரச் சேவைப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
ரஷ்யப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை மதிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.